Sambava king of Cheral Adhan (Parayan Champan) வஞ்சியின் மன்னவன் சேரல் ஆதன் (பரயன் சாம்பவனேன்) rey de vanchi Cheral Adhan (Champan parayan)



















Sambava king of Cheral Adhan (Parayan Champan) வஞ்சியின் மன்னவன் சேரல் ஆதன் (பரயன் சாம்பவனேன்)  rey de vanchi Cheral Adhan (Champan parayan)

*El poeta romano Plinio llamó a la India "la joya de la tierra".

(La palabra tamil para estas piedras preciosas como "Paral" பரல் puede ser la palabra romana para "berilo" (piedra).

De reyes romanos monedas de oro disponibles en el sudeste asiático. Este es el punto culminante del negocio de la hora y su participación con los romanos






பழங்காலத்தில் ஆற்றங்கரைகளில்தான் பண்டைய ஊர்கள் அமைந்திருந்தன. நாகரிகத் தொட்டில்களை வளர்த்த பெருமையும் அந்த ஆற்றங்கரைகட்கே உண்டு. அந்த வகையில் தமிழ் நாட்டிலும் காவிரி, அமராவதி, தாமிரபரணி, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளின் ஒரங்களிலேயே பழம்பெரும்பகுதிகள் பல அமைந்திருக்கக் காணு கின்றோம்.

"நீடு புகழ் நொய்யல்!" சேரல் ஆதன் நாடு பெருந்துறையில்  காவிரி  யாற்றுடன் கலக்கும் ஒரு சிற்றாறுதான் " கோயமுத்தூர் மாநகருக்கு வடமேற்கே உள்ள போளுவாம்பட்டிப் பள்ளத்தாக்கில் தோன்றிச் சுமார் 170 கிலோ மீட்டர் கிழக்கு நோக்கி ஒடிக் கொடுமுடிக்குத் தென்கிழக்கில் காவிரியுடன் கலக்கிறது. நள்ளாறு, வண்ணாற்றங்கரை, நன்காஞ்சி, நீலிப்பள்ளம் முதலிய சிற்றாறுகளையும், சில ஒடை களையும், காட்டாறுகளையும் துணையாகப் பெறு கிறது நொய்யல். 'மிகு காஞ்சி!' இன்று நொய்யல் என்ற பெயரைப் பெற்றிருந் தாலும், சங்க இலக்கியத்திலும், பழம் பாடல்களி லும் இந்த ஆறு காஞ்சி என்ற பெயரையே பெற்று விளங்கி வந்துள்ளது. சங்கப் பாடல் பாடிய பரணர் பதிற்றுப்பத்தில் காஞ்சி ஆற்றைக் குறிப்பிடு கின்றார்.

*"வேனில்காலத்தில் எடுக்கும் நல்ல நீர் விழாவின்போது மக்கள் தங்கள் வீட்டினுள் தங்காமல் சுற்றத்தாருடன் அழகிய சோலைகளில் தங்கி இன்பமாகப் பொழுதைப் போக்கி நீராடி உண்டு மகிழும்படியான காஞ்சியாற்று மணலினும் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் வாழ்நாட்கள் மிகுவதாக" என்கிறார் பரணர்.

*" மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவில் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே' *(பதிற்றுப்பத்து, 48; 14-18)
என்பது அவர் பாடிய தொடர்களாகும்.

* அணி காஞ்சிவாய்ப் பேரூர்"! என்பது சுந்தரர் தேவாரம்,
'காஞ்சிவாய்ப் பேரூர்' என்பது பாண்டியர் செப்பேட்டு வாசகம் ஆகும்.

(காஞ்சி-நொய் யலாக மாற்றம் பெற்றது ஆய்வுக்குரியது.) இக் காஞ்சியம் பெருந்துறையின் இரு கரைகளிலும் அமைந்த பேரூராக முன்பு கொடு மணல் இருந் துள்ளது. இன்றும் நொய்யலாற்றின் இரு கரைகளிலும் 18 கோயில்களைத் தன்னகத்தே பெற்று 6 கிலோ மீட்டர் சுற்றளவில் அப்பழம்பதி அமைந் துள்ளது. இன்றைய ஈரோடு மாவட்டத்தில்  உள்ள பெருந்துறை வட்டத்தின் தென் கோடியில் கொடுமணல் அமைந்துள்ளது. வண்ணந் தீட்டிய பானை ஒடுகள் தீட்டிய கற்களும் சுடுமண் மணிகளும் வஞ்சி சேரர், தலைநகர் வஞ்சிமா நகர் பற்றிய கருத்து மாறுபாடுகள் இருப்பினும் சேர மன்னர்களில் ஒரு கால்வழியினர் கருவூரைத் தலை நகராகக் கொண்டு அரசு புரிந்து வந்துள்ளனர் என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும்.

புகழுர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் உள்ள தமிழ்க் கல்வெட்டு, '*மூதா அமண்ணன் யாற்றுார் செங்காயபன் கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் (உறைய் பெருங்கடுங்கோன் மகன் இளங் கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்" என்பதாகும். இக் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றுள்ள மூன்று சேர அரசர்களும், பதிற்றுப்பத்தின் 7, 8, 9ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவர்களான, *"செல்வக் கடுங்கோ வாழியாதன்" *"தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை" *"குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை" ஆகிய மூவரும் தாம் என்பது ஆய்வாளர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்ட கருத்தாகும். இவர்களின் தலைநகர் கருவூரும் இங் குள்ள ஒரு கல்வெட்டில் குறிக்கப்பெறுகின்றது. கொடுமண நன்கலம் இதில் கண்ட மூன்று அரசர்களில் இறுதி இரண்டு அரசர்களும் கொடுமணம் என்ற ஊரில் செய்யப் பட்ட தொழில் வேலைப்பாடு சிறந்த அணிகலன் களைப் பாணருக்கும், பிற இரவலர்க்கும் வழங்குவர் என்று பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

*'கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபின் கைவல் பாண தெண்கடல் முத்த மொடு நன்கலம் பெறுகுவை" ر5 -67:1) "கொடுமணம் பட்ட வினைமாண் நன்கலம் பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம் வரையக நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறிக் கவை மரம் கடுக்கும் கவலைய" (74: 5-9) இந் நன்கலம் தரும் கொடுமணம் எது?

அதுவே இன் றைய நொய்யலாற்றின் கரையில் உள்ள கொடு மணல்தான் என்பதே.

 ரோம் நாட்டினரைக் கவர்ந்த மணிகள் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதலே ரோம் நாட்டினர், கிரேக்கர், யூதர், அராபியர் முதலிய தரகுகள் மூலம் தமிழ்நாட்டோடு வாணிகத் தொடர்பு கொனடிருந்தனர். மிளகு, ஏலக்காய், தந்தம் முதலிய மலைபடு பொருட்காகவும், முத்து முதலிய கடன் படு பொருட்காகவும் தமிழகத்திற்கு நேரில் வந்த ரோமானியரைச் சேர நாட்டு  நீலம் , பச்சை சிவப்பு, படிகம் முதலிய பல வண்ணக் கற்கள் கவர்ந்தன. ரோம் பெண்கள் கடல்நீலம், பச்சை கற்களை மிகவும் விரும்பினர். மேற்குக் கடற்கரையில் இறங்கிப் பாலக்காட்டுக் கணவாய் வழியாக சேர நாட்டுக்குள் நுழைந்த ரோமானியர் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த பெரு வழிமூலம் கரூர் உறையூர் முதலிய ஊர்களுக்குச் சென்றனர். கிழக்கு நோக்கிச் செல்லும் வழியில் ,

    *சேர நாட்டில் படியூர், பட்டாலி போன்ற இடங்களில் அவர்களைக் கவர்ந்த வண்ணக் கல் மணிகளையும் தங்கள் நாட்டுக்கு வாங்கிச் சென்றனர். இதனைத் தாலமி, பிளைனி போன்றவர்களும் குறிப்பிடுகின்றனர். பிளைனி இந்தியாவையே "இரத்தின பூமி என்றான். இம் மணிகளுக்காக ரோம் நாட்டிலிருந்து சேர நாட்டுக்கு ஏராளமாகத் தங்கமும் தங்கக் காசுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. டைபீரியன் என்ற ரோம் நாட்டு மன்னன் தன் நாட்டுத் தங்கம் வெளி நாட்டுக்கு ஏற்றுமதியாவதைத் தடுக்க முயன்றான். ஆனால் முடியவில்லை ("பரல்" என்று இம் மணிகளைக் குறித்த தமிழ்  சொல் "பெரில்" (கல்) என்ற ரோமானிய சொல்லாக இருக்கக்கூடும்).
( the Roman poet Pliny called India "the gem of the earth."

(The Tamil word for these gem stone as "Paral" பரல்  may be the Roman word for "beryl" (stone).


Of Roman kings gold coins available in Southeast Asia. This is the highlight of the hour business and its involvement with the Romans.)

**El poeta romano Plinio llamó a la India "la joya de la tierra".

(La palabra tamil para estas piedras preciosas como "Paral" பரல் puede ser la palabra romana para "berilo" (piedra).

De reyes romanos monedas de oro disponibles en el sudeste asiático. Este es el punto culminante del negocio de la hora y su participación con los romanos

 தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கும் ரோமானிய அரசர்களின் காசுகள் மிகுதியான இடங்களிலும், மிகுதியான அளவிலும் நொய்யல் ஆற்றுப் பள்ளத் தாக்குகளிலேயே கிடைத்துள்ளன. இம் மணி வணி கத்தின் சிறப்பும் ரோமானியர்கட்கு அதில் இருந்த ஈடுபாடும் இதனால் விளங்கும். 

  எங்கும் எழில் மணிகள் பதிற்றுப்பத்தில், கால் நடை களை ஒட்டிக் கொண்டு காடுகட்குச் செல்வது,  புன்செய் நிலத்தைக் கலப்பையால் உழுவார்க்கும், மழை பெய்தவுடன் காட்டுப் பகுதிக்குச் செல்லும் மக்களுக்கும் அவர்கள் கால்பட்ட இடமெல்லாம் மணிகள் பல கிடைக்கும் என்று விவரிக்கப்பட் டுள்ளது. ""முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறு உம்' )20-22 ;21( ܝ . 95 Page 528 *.கானத்துக் - - கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின் அலங்குகதிர்த் திருமணி பெறுTஉம் அகன்கண் வைப் பின் நாடு' (58: 12-19) 'கடத்திடைப் பிடவின் தொடக்குலைச் சேக்கும் வான்பளிங்கு விரை இய செம்பரல் முரம் பின் இலங்கு கதிர்த் திருமணி பெறுTம் அகன்கண் வைப்பின் நாடு' (66 : 17-20) "கருவி வானம் தண்டுளி சொரிந்தெனப் பல்விதை உழவில் சில்லே ரா ளர் பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி இலங்கு கதிர் திருமணி பெறுா உம் அகன்கண் வைப்பின் நாடு' (76 : 10-15) என்பன முறையே பாலைக் கவுதமனார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், கபிலர், அரிசில் கிழார் ஆகியோர் பாடிய பாடல்களாகும். இவை கற்பனையல்ல, புலவர்கள் நேரில் கண்டு அறிந்து பாடியவையே என்பது இன்றைய கொடு மணலில் , தமிழக அரசின் தொல்பொருள் துறையினரும் கண்ட வியக்கத்தக்க அரும்பொருள்கள் மூலம் அறியலாகும். இன்றும் பதிற்றுப்பத்து வருணனைபோல் மழை பெய்தவுடனும், ஆடுமாடு மேய்க்கும்போதும், உழவு உழும்பொழுதும் பல வண்ண மணிகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.  கொடுமணலில் ரோமர் அகஸ்டஸ், ட்ரூ ஸ ஸ், அந்தோணியா, ஜெர் மேனிக்கஸ், டைபீரியஸ், கேலிகுலா, கிளாடியஸ், நீரோ, டோ மிஷியஸ், நெர்வா, டிராஜன், கம்மோ டியஸ், கான்ஸ்டாண்டினஸ் ஆகிய ரோமானிய அர சர்களின் காசுகள்  தமிழகத்தில்  வெள்ளலூர், கலையமுத்தூர், பொள் ளா ச்சி, கரூர், கத்தாங் கண்ணி, பேரூர், வடக்குப்பூதிநத்தம், ஆனைமலை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. உலகெங்கும் அன்று வழக்கில் இருந்த ரோமா னியர்தம் தங்கக் காசுகள் சுத்தமாகவும், தேயா மலும், புத்தம் புதியதாகவும், தமிழ்  நாட்டில் கிடைப்பதால் ரோமானியர் குடியிருப்புகளும், நாணயச் சாலையும் கொங்கு நாட்டிலேயே இருந் திருக்கவேண்டும் என்பது அறிஞர் கருத்து. கொடுமணலிலும் இரண்டு ரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன. அவற்றுடன் கறுப்பாகவும், கலவைப் பூச்சுகளால் மிளிரும்படியாகவும், வழ வழப்பாகவும், பளப்பளப்பாகவும் கண்ணாடிபோல் காட்சி அளிப்பதும், ஒன்றுக்கு மேற்பட்ட பல வட் டங்களையுடைய 'ரவுலடெட் ஒடும், மங்கலான குங்கும நிறம் கொண்ட 'அரிடைன் ஒடும் கிடைத் துள்ளன. கொடு மணலுக்கும் ரோமானியருக்கும் உள்ள தொடர்பை இவை விளக்கும். கொடுமணல் கொடுக்கும் மணிகள் கொடுமணலில் கிடைக்கும் தொல்பொருள்கள் பல சங்க இலக்கியங்களோடு பொருத்தமாகக் காணப்படுகின்றன. மணிகளைப் பற்றியும், அவை களைத் துளையிடுவது பற்றியும் மதுரைக்காஞ்சி முதலிய சங்க இலக்கியங்கள் பேசும். கொடுமணலில் பல வண்ணக் கற்களுடன் அழ காகச் செதுக்கிப் பட்டை தீட்டித் துளையிடப் பெற்ற பல நிற மணிகளும் கிடைத்திருக்கின்றன. அவை மணிகளின் இருபுறமிருந்து துளையிடும் வேலைப்பாட்டினையும் நமக்குக் கூறுகின்றன. அழகிய வெண் படிகக் கற்களுடன், மாணிக்கம், வைடூரியம், கோமேதகம், பவளம், செவ்வந்திக்கல், குருந்தக்கல், கடல் நீலம், பச்சை, சிவப்பு, இளஞ் சிவப்பு, கருஞ்சிவப்பு நிறத்தில் செதுக்கிய மணிகளும் கிடைக்கின்றன. இத்தகு கற்களில் பாசிகளும் பதக்கமும் கிடைக் கின்றன. உயர்ந்த இப் பொருள்களுடன் சுட்ட மண்ணில் செய்யப்பட்ட பாசிகளும் காதணிகளும் கிடைத்திருப்பது வியப்புக்குரியது. சங்க காலத்தில் சங்கு வளைகள் கடலில் கிடைக்கும் பெரிய சங்குகளை அறுத்து, வளையல் முதலிய அணிகளாகச் செய்வது சங்ககால வழக்கம். சங்கு எடுப்போர் கொற்கை யில் தனி இடத்தில் வாழ்ந்தனர் என்று மதுரைக் காஞ்சி கூறும். கூர்மையான இரும்புக் கருவிகளைக் கொண்டு சங்குகளை அறுத்துப் பின் அதை வளையல் முதலிய பல அணிகளாகக் கடைவர். அச் சங்குகள் வளைவாக இருக்கும். சங்கு க ளின் அறுத்த மீதிப் பகுதிகள் கண்களைப் போன்று இருக்கும். இச் சங்குகள் ஒளி வீசும்படியாகவும் வெண்மை யாகவும் இருக்கும். இலங்கு வளை இருசேரி (மதுரைக். 136) வாள் அரம் துமித்த வளை (அக. 125) அரம்போழ் அவ்வளை (அக. 349) சுரிவளை (குறு. 260) அரம்போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்கு வளை (மதுரைக். 316) கோடீர் எல்வளை (ஐங். 135) கோடீர் இலங்கு வளை (குறு. 11) Page 529 என்பன சங்க இலக்கியத் தொடர்கள். நூற்றுக் கணக்காக அறுத்த சங்குகளும், சங்கு வளையல் களும், மோதிரம், காதணி, பாசிகள் சோன்ற சங்கில் செய்த பல வேலைப்பாடு மிக்க அணி கலன்களும் கொடுமணலில் கிடைத்துள்ளன. சங்கு வளையல்கள் மட்டுமன்றிக் கறுப்பு, சிவப்பு, பச்சை முதலிய வண்ணக் கற்களிலும் செய்யப்பட்ட வளையல் துண்டுகள் கிடைத்துள்ளன. பிற தொல்பொருள்கள் - - பழங்காலத்து எழுத்தான தமிழ் (பிரர் மி) எழுத் துகள் பொறிக்கப்பட்ட ஒடுகள் பல கொடுமணலில் கிடைத்துள்ளன. அவை 'குதிர்ரா, மா, தா, கோ, வேன்கு' போன்றவையாகும், கிராபிடி எனப்படும் அடையாளக் குறியீடுகள் உள்ள பானை ஒடுகள் பல கிடைத்துள்ளன. சுடுவதற்கு முன் அழகிய பல தோற்றங்களில் முத்திரை பதிக்கப் பட்டுப் பின் சுட்டுப் பயன்படுத்திய பானை ஒடு களும் கிடைத்துள்ளன. தமிழக  நாகரிகத்திற்கே உரிய மெல்லிய பளப் பளப்பான, கறுப்பு சிவப்பு ஒடுகளும், கறுப்பு ஒடு களும், சிவப்பு ஒடுகளும், பழுப்பு நிற ஒடுகளும், ரசக் கலவையும் வண்ணமும் பூசப்பட்ட ஒடுகளும் கொடுமணலில் கிடைத்துள்ளன. கோயமுத்தூர் வகை என்று தொல்லியல் நிபுணர் களால் கூறப்படும் வெள்ளை, சிவப்பு நிறத்தில் அலை அலையாக வளைந்தும் நெளிந்தும் அழகிய கோடுகளை உடைய பானை ஒடுகள் கொடுமண லில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. அக் கோடுகள் வெளிப்பக்கம் மட்டும் பெரும்பாலும் இருப்பது வழக்கம். ஆனால் கொடுமணலில் உள் பக்கமும் அக் கோடுகள் இருப்பது சிறப்பானதொன்றாகும். பூவேலைப்பாடு, கட்டங்கள், நேர்க்கோடு, குறுக் குக்கோடு ஆகிய வரைந்த பானை ஒடுகளும் கிடைத் துள்ளன. பழங்கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலக்கருவிகளான நுண்கற்கருவிகள் பளப்பளப்பான பல கற்களில் இங்குக் கிடைக்கின் றன. படிகக் கல்லில் செய்யப்பட்ட அழகிய கைக் கருவி ஒன்றும் மிக அரிதாகக் கிடைத்துள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 4000 ஆகும். இரும்புத் தாதுக் கற்களும், உருக்கி எடுத்த இரும்பின் பகுதிகளும், இரும்பு உருக்கும் குழாய் களும் கிடைத்துள்ளன. செங்கற்களும் செதுக்கிய பெரிய கற்களும் கிடைத்துள்ளன. . . . . . 3 இவைகள் அனைத் தும் கிடைக்கும் மக்கள் வாழிடத்தின் அருகே பெருங்கற்காலப் புதைகுழிகள் பலவும், நெடுநிலை நடுகல்லும் உள்ளன. மா ன் கொம்பு, விலங்கின் பற்கள், பெரிய எலும்புகள் ஆகியவையும் கிடைத்திருக்கின்றன. இலக்கியங்களும் கல்வெட்டுகளும் '. பிற்காலத்தும் கொடு மணல் மிகச் சிறப்பாக விளங் கியுள்ளது.  கொடு மணல், \ வடகரைக் கொடுமணல், தென்கரைக் கொடுமணல் என்று ஆற்றின் இரு பகுதி ஊர்களும் அழைக்கப்பட்டன. சிவாலயத்திலும் பெருமாள் கோவிலிலும் மிகச் சிதைந்த நிலையில்  சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தனி ப் பாடல்களும், காணிப் பாடல்களும், பதிகம் - பந்த டி-காதல் போன்ற பிரபந்தங்களும் பிற்காலக் கொடு மணலைப் பெரிதும் பாராட்டு கின்றன. அருள்பரவு கொடுமணல் ஆதி கொடு மணல் ஆலயஞ்செறி கொடுமணல் ஏர்மேவு கொடு மணல் கார்மேவு கொடு மணல் குலவுபுகழ் கொடு மணல் சிறப்பான கொடுமணல் தங்கம் விளங்கும் கொடுமணல் தருமம் வளர் கொடுமணல் திருமருவும் கொடுமணல் தேர் பரவும் கொடு மணல் தேர்ந்த கொடு மணல் மோது புகழ்க் கொடு மணல் என்றெல்லாம் கொடு மணல் பெரிதும் பாராட்டப் பெறுகின்றது. மேல்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட இச் சில பொருள்களே அரியவையாகவும், பழம்பெருமையை கூறுவனவாகவும் உள்ளன. முறையான அகழ் வாராய்ச்சி அங்கு நடைபெறுமானால் பழந்தமிழ் நாகரிகம் நன்கு வெளிப்படுவதுடன், சங்க இலக்கி யத்தின் தொன்மையும் புலப்படும். தொகுக்கப்பட்ட பொருள்கள் ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்தின் கலைக்கூடத்தில் காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் வந்து கண்டு ஆராய்ச்சியை மேற்கொள்வார்களாக!


சுமணன் சாம்பான் அவர்களின்  ஆய்வு கூடமாக சேரல் ஆதன் சாம்பவர்  மன்னரின் எல்லைக்குள்  உள்ள  உலகம்  வியக்கும்  வரலாற்று  பேழையை சாம்பான் கள் மெருகேற்றும்  வழி யாதோ?

இவண்: செம்பொன்மாரி சாம்பான் அருள்மொழி தேவர் 

No comments:

Post a Comment

சாம்பான் பெயர் பொருள் : மகிழ்ச்சி, பங்களிப்பு, மனக்கிளர்ச்சி. (Sambava Name Meaning)

  Letter Analysis S People with the 'S' initial are empathic and show a lot of understanding, being able to show consideration for w...